நிறைய நேரம் வீணாகிவிட்டது... புதிய இந்தியாவுக்கான பணிகளை தொடங்குங்கள் - பிரதமர் மோடி


நிறைய நேரம் வீணாகிவிட்டது... புதிய இந்தியாவுக்கான பணிகளை தொடங்குங்கள் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 28 Dec 2021 3:19 PM IST (Updated: 28 Dec 2021 3:19 PM IST)
t-max-icont-min-icon

ஏற்கனவே நிறைய நேரம் வீணாகிவிட்டது... புதிய இந்தியாவுக்கான பணிகளை தொடங்குங்கள் என்று ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

கான்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியாவும் புதிய பயணத்தை தொடங்கியது. 25 ஆண்டுகள் நிறைவடைந்தபின்னர் நாடு சொந்தக்காலில் நிற்க நிறைய பணிகள் நடைபெற்றது. ஆனால், நிறைய நேரம் வீணானது.

நாடு நிறைய நேரத்தை இழந்துள்ளது. இரண்டு தலைமுறைகள் சென்றுவிட்டன. தற்போது நாம் ஒவ்வொரு தருணத்தையும் தவற விடக்கூடாது. பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் நாட்டின் வளர்ச்சிக்கான கடிவாளத்தை கையில் எடுத்து புதிய இந்தியாவுக்கான பணிகளை தற்போதே தொடங்க வேண்டும். நாட்டின் அடுத்த 25 ஆண்டுகள் நாடு எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை காட்டுவது உங்கள் கடமை’ என்றார். 
1 More update

Next Story