கொரோனா 3-வது அலைக்கு தயாராக வேண்டும் - அதிகாரிகளுக்கு, ஒடிசா முதல்-மந்திரி உத்தரவு
கொரோனா 3-வது அலைக்கு தயாராக வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
புவனேஸ்வர்,
ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள மாநிலத்தின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாநிலத்தில் இதுவரை 8 பேருக்குத்தான் ஒமைக்ரான் தொற்று உறுதியாகி இருக்கிறது என்றாலும், இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும். எனவே கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தயாராக வேண்டும்.
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக அனைத்து தகுதியுள்ள நபர்களுக்கும் ஸ்மார்ட் சுகாதார அட்டைகளை ஒரு வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆஸ்பத்திரிகளுக்கு போதுமான ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட வேண்டும்.
மாநிலம் முழுவதும், குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story