குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது பா.ஜ.க.: ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு


குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது பா.ஜ.க.:  ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Dec 2021 5:49 AM IST (Updated: 29 Dec 2021 5:49 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.


சண்டிகார்,

சமீபத்தில் சண்டிகாரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 35 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 14ல் வெற்றி பெற்றது.  பா.ஜ.க. 12 வார்டுகளிலும், காங்கிரஸ் 8 மற்றும் அகாலி தளம் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. தலைவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக ஆம் ஆத்மி தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுபற்றி அக்கட்சியின் ராகவ் சத்தா கூறும்போது, ஆம் ஆத்மியை சேர்ந்த இரு கவுன்சிலர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், ஒரு கவுன்சிலருக்கு 75 லட்சம் ரூபாயும் தருவதாக பா.ஜ.க. தலைவர்கள் ஆசை காட்டி உள்ளனர். வீட்டுக்கே வந்து பேரம் பேசி உள்ளனர்.

ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த உள்ளோம். இனி நேரிலோ, தொலைபேசியிலோ அணுகி பேரத்தில் ஈடுபட்டால் வீடியோ, ஆடியோவை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.  எனினும், இதற்கு சண்டிகார் பா.ஜ.க. தலைவர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.


Next Story