நடுரோட்டில் மகன் கண்முன்னே பெண் கொடூரக்கொலை - 2-வது கணவருக்கு தொடர்பா?


நடுரோட்டில் மகன் கண்முன்னே பெண் கொடூரக்கொலை - 2-வது கணவருக்கு தொடர்பா?
x
தினத்தந்தி 29 Dec 2021 8:36 PM IST (Updated: 29 Dec 2021 8:36 PM IST)
t-max-icont-min-icon

நடுரோட்டில் மகன் கண்முன்னே பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பெலந்தூர் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி (40). ரியல் எஸ்டேட் தொழில் அதிபரின் மகளான இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

இதற்கிடையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை அர்ச்சனா ரெட்டி விவாகரத்து செய்தார். இதனையடுத்து, நவீன் ரெட்டி என்பவரை அர்ச்சனா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், அர்ச்சனாவுக்கு தனது இரண்டாவது கணவரான நவீனுக்கும் இடையே பூர்வீக சொத்து விவகாரத்தில் தகராறு நிலவி வந்துள்ளது. இது தொடர்பாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்துள்ளனர். நவீன் ஜிஹானி நகரிலும், அர்ச்சனா பெலந்தூர் நகரிலும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அர்ச்சனா தனது 16 வயது மகனுடன் காரில் நேற்று முன்தினம் மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க ஜிஹானி நகருக்கு சென்றுள்ளார். வாக்களித்துவிட்டு அர்ச்சனா தனது உறவினர்களின் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு பெலந்தூர் நகருக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.

அந்த காரில் அர்ச்சனா அவரின் 16 வயது மகன் மற்றும் உறவினர்களான மனோஜ், ஹரிஸ், பிரமோத் என மொத்தம் 5 பேர் பயணித்தனர்.

கார் எலக்ட்ரானிக் சிட்டியின் அக்ரகாரா சிக்னல் அருகே சென்றபோது இரு பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அர்ச்சனா பயணித்த காரை இடைமறித்தது.

கும்பல் இடைமறித்ததை கார் சாலையின் அருகே இருந்த கம்பி மீது மோதியது. உடனடியாக, கும்பல் தங்களை தாக்க வருவதை உணர்ந்த அர்ச்சனா மற்றும் அவரது உறவினர்கள் தப்பியோட முயற்சித்தனர்.

ஆனால், உறவினர்களான மனோஜ், ஹரிஸ், பிரமோத் 3 பேரும் தப்பியோடிய நிலையில் அர்ச்சனாவை அந்த கும்பல் இடைமறித்துக்கொண்டது. அப்போது அங்கிருந்த அர்ச்சனா தப்ப முயன்ற போது அவரை அந்த கும்பல் கொண்டுவந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொடூரமாக தாக்கியது. இந்த கொடூர தாக்குதல் அர்ச்சனாவின் மகன் கண் முன்னே அரங்கேறியுள்ளது.

பரபரப்பான சாலையின் நடுவே அர்ச்சனாவை அந்த கும்பல் கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து பைக்குகளில் தப்பிச்சென்றது. கும்பலின் கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த அர்ச்சனா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த கொடூர கொலையில் அர்ச்சனாவின் 2-வது கணவர் நவீன் ரெட்டிக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். நவீன் ரெட்டி தற்போது தலைமறைவாக உள்ளதால் அவரை தேடி வருகின்றனர். நவீன் பிடிபடும் பட்சத்தில் இந்த கொடூர கொலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story