ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு


ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு
x
தினத்தந்தி 29 Dec 2021 5:51 PM GMT (Updated: 2021-12-29T23:21:28+05:30)

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள மிர்ஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள்  சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story