மகரவிளக்கை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
மகர விளக்கை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
திருவனந்தபுரம்,
மகர விளக்கை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு , சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 15-ந் தேதி
திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள வழிபாடுகளுக்கு பின் கடந்த 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது.
பிரசிதிப்பெற்ற மண்டல பூஜையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்கு பின் அன்று
இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.
மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
நேற்று மற்ற விஷேச பூஜைகள் நடைபெற வில்லை. பக்தர்களுக்கும் சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இன்று வெள்ளிக்கிழமை முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உட்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும்.
பிரதிதிப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் 2022 ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது.இதையொட்டி, மகர விளக்கு தினத்தில் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா
கோவிலில் இருந்து ஊர்வாலமாக, ஜனவரி 12- ந் தேதி புறப்படும். முன்னதாக அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு அய்யப்ப பக்த குழுவினரின் எருமேலி பேட்டை துள்ளல் 11-ந் தேதி நடைபெறும். 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை படி பூஜை உட்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். 20-ந் தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.
அன்றைய தினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 60 ஆயிரம் பக்தர்களுக்கும் நேரடி உடனடி ஆன்லைன் முன் பதிவு மூலம் தினசரி முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தற்போது தரிசன அனுமதி வழங்கப்படும். மேலும் இன்று முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும்
சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
35 கி.மீ தூரமுள்ள இந்த பாதையில் 25 கி.மீ தூரம் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் பலத்த கட்டுப்பாடுகளுடன் மட்டுமே அய்யப்ப பக்தர்கள் எருமேலி பெருவழி பாதை வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.எருமேலியில் பக்தர்கள் உடனடி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.
அதே போல் எருமேலி கோழிக்கடவில் இருந்து காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், அழுதக்கடவு, முக்குழியில் இருந்து காலை 7 மணிமுதல் 12 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா கட்டுப்பாடு காரணமாக, கொரோனா 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் தரிசனத்திற்கு வரும் போது கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.
பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். மகரவிளக்கை முன்னிட்டு , திருவனந்தபுரம் உட்பட மாநிலத்தின் பில் வேறு பகுதிகளில் இருந்தும் கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பேருந்துகள் நிலக்கல், பம்பைக்கு இயக்கப்படுவதாக மேலாண்மை இயக்குனர் பிஜூ பிரபாகர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story