கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் சவுரவ் கங்குலி - மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்


கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் சவுரவ் கங்குலி - மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
x
தினத்தந்தி 31 Dec 2021 2:40 PM IST (Updated: 31 Dec 2021 2:40 PM IST)
t-max-icont-min-icon

சவுரவ் கங்குலி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 28-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்ட கங்குலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், சவுரவ் கங்குலி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்த போதும் சவுரவ் கங்குலி சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story