பஞ்சாப்: கெஜ்ரிவால் தலைமையில் 'அமைதி பேரணி’


பஞ்சாப்: கெஜ்ரிவால் தலைமையில் அமைதி பேரணி’
x
தினத்தந்தி 31 Dec 2021 3:22 PM IST (Updated: 31 Dec 2021 3:22 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால் தலைமையில் ‘அமைதி பேரணி’ நடைபெற்றது.

சண்டிகர்,

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அம்மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. 

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பாடியாலாவில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று ‘அமைதி பேரணி’ நடைபெற்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொற்கோவிலில் அத்துமீறி நுழைந்த நபர் அடித்துக்கொலை, சீக்கிய கொடியை அவமதித்த நபர் அடித்துக்கொலை, லூதியானா கீழமை கோர்ட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் வெடிகுண்டை வைத்த நபரே உயிரிழந்தார். இந்த அடுத்தடுத்த சம்பவங்களால் பஞ்சாபில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனையடுத்து, பஞ்சாபில் அமைதியை நிலைநாட்டும் வகையில் ‘அமைதி பேரணி’ நடத்தப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story