கடுங்குளிர் எதிரொலி; பாட்னாவில் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மூடப்படுகிறது


கடுங்குளிர் எதிரொலி; பாட்னாவில் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மூடப்படுகிறது
x
தினத்தந்தி 2 Jan 2022 5:40 PM GMT (Updated: 2022-01-02T23:10:14+05:30)

பீகாரின் பாட்னா நகரில் கடுங்குளிரை முன்னிட்டு 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 8ந்தேதி வரை மூடப்படுகிறது.


பாட்னா,

பீகாரில் பனிக்காலத்தில் கடுங்குளிர் மக்களை வாட்டி வருகிறது.  இதனால், பாட்னா நகரில் காலையில் குளிரான சூழல் மற்றும் குறைவான வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது.

இது பள்ளிக்கு புறப்படும் குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் வாழ்வுக்கு ஆபத்து ஏற்படுத்தும் என கவனத்தில் கொண்டு, 8ம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வருகிற 8ந்தேதி வரை மூடப்படுகிறது என மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திரா சேகர் சிங் அறிவித்து உள்ளார்.


Next Story