முன் எச்சரிக்கை ‘டோஸ்’ தடுப்பூசி எது? மத்திய அரசு அறிவிப்பு


முன் எச்சரிக்கை ‘டோஸ்’ தடுப்பூசி எது? மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2022 9:59 PM GMT (Updated: 5 Jan 2022 9:59 PM GMT)

வரும் 10-ந் தேதி இந்த தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் சுகாதார பணியாளர்களுக்கும், முன் கள பணியாளர்களுக்கும், இணைநோய்களுடன் அவதிப்படும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை தடுப்பூசி என்ற பெயரில் போடப்பட உள்ளது. 

வரும் 10-ந் தேதி இந்த தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இந்த முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசியாக எந்த தடுப்பூசியை போடுவது என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. 

நேற்று இது குறித்த அறிவிப்பை மத்திய அரசின் சார்பில் நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினரும், கொரோனா தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய நிபுணர்குழுவின் தலைவருமான வி.கே. பால் வெளியிட்டார். அவர், முதல் 2 டோஸ் தடுப்பூசியாக என்ன தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அதே தடுப்பூசிதான் முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசியாகவும் போடப்படும் என தெரிவித்தார். எனவே கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளில் எதை முதலில் பயனாளிகள் செலுத்திக்கொண்டார்களோ, அதே தடுப்பூசியைத்தான் முன்எச்சரிக்கை டோஸ் தடுப்பூசியாகவும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story