மேற்கு வங்காளத்தில் கொரோனா உயர்வு; பிரதமருடன் பேச மம்தா பானர்ஜி முடிவு


மேற்கு வங்காளத்தில் கொரோனா உயர்வு; பிரதமருடன் பேச மம்தா பானர்ஜி முடிவு
x
தினத்தந்தி 6 Jan 2022 11:46 AM GMT (Updated: 6 Jan 2022 11:46 AM GMT)

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ள சூழலில் பிரதமர் மோடியுடன் பேச மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.


கொல்கத்தா,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது.  சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்திற்கும் கூடுதலாக பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்காளத்திலும் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வருகின்றன.  இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதித்த 2,075 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்தம் 403 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன.  கொரோனா பாதிப்பு விகிதம் 23.17% ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.18% ஆகவும் உள்ளது.  19,517 படுக்கைகள் தயாராக உள்ளன.  மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை முடிவு கட்டாயம்.

அடுத்த 15 நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.  கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்.  இதுபற்றி ஆலோசனை மேற்கொள்ள பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி வழியேயான கூட்டமொன்றில் நாளை பேச உள்ளேன் என்று கூறியுள்ளார்.


Next Story