மருத்துவ பரிசோதனைக்காக பினராயி விஜயன் அமெரிக்கா பயணம் 15-ந்தேதி புறப்படுகிறார்


மருத்துவ பரிசோதனைக்காக பினராயி விஜயன் அமெரிக்கா பயணம் 15-ந்தேதி புறப்படுகிறார்
x
தினத்தந்தி 6 Jan 2022 8:47 PM GMT (Updated: 2022-01-07T02:17:17+05:30)

மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வருகிற 15-ந்தேதி அமெரிக்கா செல்கிறார்.

திருவனந்தபுரம், 

மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வருகிற 15-ந்தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை முடித்து அவர் 29-ந்தேதி நாடு திரும்புகிறார்.

அவரது இந்த பயணத்தில் மனைவி கமலா மற்றும் உதவியாளர் சுனீஷ் ஆகியோர் உடன் செல்கின்றனர். முதல்-மந்திரியின் இந்த பயண செலவினங்களை மாநில அரசு ஏற்கும் என தலைமை செயலாளர் அறிவித்து உள்ளார்.

பினராயி விஜயன் கடந்த 2018-ம் ஆண்டிலும் அமெரிக்காவின் மின்னெசோட்டாவில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story