வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் இளம் மனைவிகளை மயக்கி பணம் பறிக்கும் கும்பல்


வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் இளம் மனைவிகளை மயக்கி பணம் பறிக்கும் கும்பல்
x
தினத்தந்தி 7 Jan 2022 12:35 PM GMT (Updated: 7 Jan 2022 1:18 PM GMT)

வெளிநாட்டில் வசிக்கும் கணவர்களின் இளம் மனைவிகளை குறிவைத்து பணம் நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்காடு:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்ப மங்கலம் பகுதியில் உள்ளது தாய் நகர். இங்கே வசிப்பவர்கள் அப்துல் சலாம் (32). அஷ்ரப்(36). வாடா நாப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரபீக் (31). இவர்கள் 3 பேரும் இந்தப் பகுதியில் உள்ள வெளிநாட்டில் வசிக்கும் ஆண்களின்  இளம் மனைவிகளை கண்டுபிடித்து அவர்களிடம் நைசாக பேசி பல ரகசியங்களை தெரிந்து கொள்வார்கள். 

பின்பு அவர்களிடம் ஆபாசமாக பேசி பேசி அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் அவர்களிடம் தவறான வழியில் நடப்பதற்கு முயற்சி செய்து அவர்களை மயக்கி அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிப்பது இவர்களது பழக்கம்.

கொடுத்த பணம் நகைகளை குறிப்பிட்ட நாளில் திருப்பித் தராமல் இருந்தால் அந்தப் பெண்கள் கேட்கும்போது நீங்கள் செய்யும் தவறுகளை வெளியே கூறி விடுவோம் என கூறி பலரையும் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். இதனால் சில பெண்கள் பணம் போனால் போகட்டும் என்று பேசாமல் இருந்து விடுவார்கள்.

அதேநேரத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இதே முறையில் இங்குள்ள ஒரு இளம்பெண்ணிடம் தொடர்பு வைக்க முயன்றார்கள் அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தார். மீண்டும் மீண்டும் அந்த பெண்ணிடம் அவர்கள் பேச முயன்ற போது கோபமடைந்த அந்த இளம்பெண் கையப்பமங்கலம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். 

போலீசார் புகாரை பதிவு செய்து மே 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல பெண்களிடம் இந்த மாதிரி பணம் மோசடி செய்தது தெரியவந்தது. விசாரணையில் இதுவரை இந்த மாதிரி பெண்களிடம் எழுபத்தி ஏழு பவுன் தங்க நகைகளையும் 60 லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

Next Story