வேகமாக பரவும் கொரோனா : மேற்கு வங்காளத்தில் 24 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு


வேகமாக பரவும் கொரோனா : மேற்கு வங்காளத்தில் 24 ஆயிரத்தை கடந்த  கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2022 3:12 PM GMT (Updated: 2022-01-09T20:42:25+05:30)

கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது

கொல்கத்தா 

மேற்கு வங்காளத்தில் வேகமாக பரவும் கொரோனா  தினசரி பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. .இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை  மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.  மேற்கு வங்காளத்தில்  கடந்த 24 மணி நேரத்தில்  24,287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 8  ஆயிரத்து 213  பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,57,034 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 78,111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும்  18  பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story