மனைவியை மாற்றி உல்லாசம் : குழுவில் உறுப்பினராக இருக்கும் தமிழக பிரபலங்கள்...!


மனைவியை மாற்றி உல்லாசம் : குழுவில்  உறுப்பினராக இருக்கும் தமிழக பிரபலங்கள்...!
x
தினத்தந்தி 12 Jan 2022 10:28 AM GMT (Updated: 12 Jan 2022 10:28 AM GMT)

இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு கணவர் தன்னை வற்புறுத்துவதாக புகார் அளித்த பெண்ணின் கணவர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்

கேரளா மாநிலம் சங்கனாஞ்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருகாச்சல் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் தனது கணவர் தன்னை இயற்கைக்கு மாறாக உடலுறவுக்கு வறுப்புறுத்தி வருவதாகவும்,  தன்னை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்த உதவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

புகாரை விசாரித்த போலீசார் ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்ணிக் கணவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது மனைவியை மனைவிகளிஅ மாற்றிக் கொள்ளும் ஸ்வாப்பிங் குழுக்களில் பரிமாறிக் கொள்ள கட்டாயப்படுத்தியது வெளிச்சதிற்கு வந்தது.  முதற்கட்டமாக இந்த குழுவில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

குழுவின் ஒரு பகுதியாக தான் இருப்பது ஒப்புக் கொண்ட அந்த நபர் மேலும் தன் மனைவியை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தி வந்ததையும் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து மனைவிகளை மாற்றி உல்லாசம் ஈடுபடும் கும்பலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். 

அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவிகளை மாற்றி உல்லாசத்தில் ஈடுபடும் செயலில் பெருங்கும்பல் ஈடுபட்டு வருவதை தெரியவந்துள்ளது. அதில் இதுவரை 7 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 25க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளதாகவும் மேலும் ஓரிரு நாட்களில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர். 

இந்த குழுக்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தம்பதிகள் இருப்பதாகவும் அவர்கள் பெண்களை பரிமாறிக் கொள்வதாகவும், கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஒரு பெரிய கும்பல் இருப்பதும் அதில் சில அரசியல் புள்ளிகளும் இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கும்பல் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள டெலிகிராம், மெசஞ்சர் செயலிகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

குற்றவாளிகள் கோட்டயம், ஆலப்புழா, மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த குழுவில் ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பதாகவும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், தமிழகம் மற்றும் கோவா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் இணைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்கள் யார்? யார்? என்பதையும் எப்படி? இக்குழுவில் சேர்ந்தார்கள்? என்பதையும் சைபர் கிரைம் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதில், உறுப்பினராக இருப்போரை  கண்டுபிடிக்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story