பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி: பிரதமர் மோடியிடம், சரண்ஜித்சிங் சன்னி வருத்தம் தெரிவித்தார்
கோப்புப்படம்பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி குறித்து பிரதமர் மோடியிடம், சரண்ஜித்சிங் சன்னி வருத்தம் தெரிவித்தார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி சர்ச்சையை கிளப்பியது. இருப்பினும், அம்மாநில முதல்-மந்திரி சரண்ஜித்சிங் சன்னி, பிரதமர் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும், பொதுக்கூட்டத்துக்கு ஆட்கள் வராததால் அவர் திரும்பி சென்று விட்டதாகவும் கூறி வந்தார்.
இந்தநிலையில், அவர் பாதுகாப்பு குளறுபடிக்காக பிரதமர் மோடியிடம் வருத்தம் தெரிவித்தார். கொரோனா விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரிகளுடன் மோடி நேற்று காணொலி மூலம் உரையாடியபோது சரண்ஜித்சிங் சன்னி இதை கூறினார்.
பஞ்சாப் பயணத்தின்போது நடந்த சம்பவத்துக்காக வருந்துவதாக மோடியிடம் அவர் கூறினார். மோடி மீது மிகுந்த மரியாதை இருப்பதாக தெரிவித்தார். மேலும், மோடி நீடூழி வாழ வாழ்த்துவதாக இந்தி கவிதை ஒன்றை வாசித்தார்.
Related Tags :
Next Story






