பாலியல் பலாத்கார வழக்கில் பிஷப் பிராங்கோ விடுதலை- தேசிய மகளிர் ஆணையம் அதிர்ச்சி


பாலியல் பலாத்கார வழக்கில் பிஷப் பிராங்கோ விடுதலை- தேசிய மகளிர் ஆணையம் அதிர்ச்சி
x
தினத்தந்தி 14 Jan 2022 10:59 AM GMT (Updated: 2022-01-14T16:29:52+05:30)

கேரளத்தை உலுக்கிய இந்த வழக்கில் பிராங்கோ விடுவிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

புதுடெல்லி,

கேரளாவை சேர்ந்த  கத்தோலிக்க பிஷப்பான பிரான்கோ முலக்கலின் மீது கடந்த 2018 -ஆம் ஆண்டு கொச்சினில் கன்னியாஸ்திரி ஒருவர், தன்னை பிஷப் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தது கேரளத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின், அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது கோட்டயம் நீதிமன்றம் வலுவான சாட்சியங்கள் இல்லாததால் பிரான்கோ முல்லக்கலை வழக்கிலிருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும், கேரளத்தை உலுக்கிய இந்த வழக்கில் பிரான்கோ விடுவிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

பிஷப் மூலக்கல் விடுதலை செய்யப்பட்டது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா, பாதிக்கப்பட்ட பெண், ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  மேலும், நீதிப்போராட்டத்தில் கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக தேசிய மகளிர் ஆணையம் உறுதுணையாக இருக்கும் “ எனவும் ரேகா ஷர்மா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 


Next Story