மும்பையில் கொரோனா பாதிப்பு 17 சதவிகிதம் குறைந்தது


மும்பையில் கொரோனா பாதிப்பு 17 சதவிகிதம் குறைந்தது
x
தினத்தந்தி 14 Jan 2022 3:34 PM GMT (Updated: 14 Jan 2022 3:42 PM GMT)

நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் பிற நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

மும்பை,

மராட்டிய தலைநகர் மும்பையில் கொரோனா தொற்று பரவல் தற்போது குறையத்தொடங்கியிருக்கிறது. தொற்று பாதிப்பு நேற்றை விட இன்று 17 சதவிகிதம் சரிந்து 11,317- ஆக  பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு  9 பேர் பலியாகியுள்ளனர். மும்பையில் நேற்று பாதித்தவர்களில் 88 சதவீதம் பேர் எந்த வித அறிகுறிகளும் இல்லாதவர்கள். 

தொற்று பாதிப்பு குறைவாக பதிவாகியிருக்கும் அதேவேளையில், பரிசோதனைகளும் நேற்றை விட 13 சதவிகிதம் குறைந்துள்ளது. மும்பையில் நேற்று பரிசோதனை 54,924- ஆக இருந்தது. நேற்று கொரோனா பாதிப்பு 13,702- ஆக பதிவாகி இருந்தது.  தொற்று பாதிப்புக்கு 6 பேர் பலியாகினர்.  

நாட்டின் நிதி தலநகரம் என்று அழைக்கப்படும்  மும்பையில் தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் பிற நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது. டெல்லியில் தொற்று பாதிபு விகிதம் 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

Next Story