தேசிய செய்திகள்

துபாய்: இந்தியாவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் மோத இருந்த விபரீதம் + "||" + DGCA seeks report from UAE authorities on two India-bound Emirates flights’ close shave at Dubai

துபாய்: இந்தியாவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் மோத இருந்த விபரீதம்

துபாய்: இந்தியாவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் மோத இருந்த விபரீதம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் விமான நிலையத்தில், இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்கள் மோத இருந்து, பின் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

துபாயில் கடந்த ஜனவரி 9-ம் தேதி இரவு, 5 நிமிட இடைவெளியில் இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்களுக்கு ஒரே ஓடு பாதை ஒதுக்கப்பட்டிருந்தது. விமானங்கள் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு இந்த விஷயத்தை அறிந்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக ஒரு விமானத்தின் பயணத்தை நிறுத்துமாறு அறிவித்து பெரும் விபத்தை தவிர்த்துள்ளனர்.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

அரபு எமிரேட்ஸ் நிறுவனத்தின் போயிங் 777  இ.கே-524 என்ற விமானம் இரவு 9.45 மணிக்கு ஐதராபாத்துக்கு புறப்பட தயாராக இருந்தது. அதே நிறுவனத்தின் மற்றொரு விமானமான போயிங் 777 இ.கே-568, 5 நிமிட இடைவெளியில் பெங்களுருக்கு புறப்பட இருந்தது. 

துபாய் - ஐதராபாத் விமானம் புறப்படுவதற்காக அறிவித்தவுடன், மிக வேகமாக 30 ஆர் என்ற ஓடுபாதைக்கு சென்றது. அப்போது, அந்த ஓடுபாதையில் பெங்களுருவுக்கு செல்ல இருந்த விமானமும் இருந்துள்ளது. இரு விமானங்களும் மோதியிருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால் இதை அறிந்த அதிகாரிகள், உடனடியாக ஐதராபாத் விமானத்தின் டேக்ஆப்-ஐ நிறுத்துமாறு அறிவுறுத்தினர். 

இதனையடுத்து, அந்த விமானம் வேறு பாதைக்கு சென்று நிறுத்தப்பட்டது. அதிகாரிகளின் தக்க சமயத்தில் எடுத்த நடவடிக்கையால் மிகப்பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் தப்பித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு விமானங்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பதிவு செய்யப்பட்டவை மற்றும் துபாயில் இந்த சம்பவம் நடந்ததால், சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் விதிகளின்படி நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் அதை விசாரிக்கும்.இருப்பினும், விசாரணை அறிக்கை கிடைக்கும்போது மற்றும் கிடைக்கும்போது பகிர்ந்து கொள்ளுமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டுள்ளோம்" என்று மூத்த டிஜிசிஏ அதிகாரி ஒருவர் கூறினார்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா..!
இந்தியாவில் மாதம் ஒன்றுக்கு 31 கோடி கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
2. ஷாருக்கான் பிறந்தநாள் துபாயில் கொண்டாட்டம் !
புர்ஜ் காலிபாவில் ஷாருக்கான் குறித்து ‘நாங்கள் உங்களை நேசிக்கிறோம்’ எனும் வாசகம் ஒளிபரப்பப்பட்டது.
3. ஐ.பி.எல்.அணியை வாங்குமா...? இங்கிலாந்து மான்செஸ்டர் கால்பந்து கிளப்
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வருகை தந்துள்ளனர்.
4. கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புர்ஜ் காலிபாவில் ஒளி அமைப்பு.!
துபாயில் உள்ள புர்ஜ் காலிபாவில் தெலுங்கானாவின் பத்துகம்மா விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
5. உலகின் மிக ஆழமான நீச்சல் குளம்: துபாயில், இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
துபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் இன்று (புதன்கிழமை) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது.