உத்தரபிரதேச தேர்தல்: யோகி ஆதித்யநாத் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 15 Jan 2022 8:37 AM GMT (Updated: 15 Jan 2022 8:37 AM GMT)

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, உத்தரபிரதேச முதல்-மந்திரியான யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதேபோல், துணை-முதல் மந்திரியான கேசவ் பிரசாத் மவுரியா சிரது தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள 58 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்துள்ளது. அதேபோல், 55 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் பாஜக இன்று அறிவித்துள்ளது.

Next Story