ஜம்முவில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் கைது


ஜம்முவில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jan 2022 12:42 AM IST (Updated: 16 Jan 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஜம்முவில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.



பந்திப்போரா,


வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, காஷ்மீர் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் 3 பயங்கரவாதிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  இதனை தொடர்ந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

அவர்கள் குலாம் முகமது, இர்ஷாத் உசைன் மற்றும் ஆசிக் உசைன் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  தொடர்ந்து போலீசார் பயங்கரவாதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story