புதிய ராணுவ சீருடையில் ராணுவத் தளபதி நரவனே...!

ராணுவத் தளபதி நரவனே புதிய ராணுவ சீருடை அணிந்து சென்றார்.
புதுடெல்லி,
இந்திய ராணுவம் தனது வீரர்களுக்கு அதிக வசதி மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை வாய்ந்த புதிய சீருடை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஜனவரி 15-ந்தேதி நடைபெற்ற ராணுவ தின அணிவகுப்பில் இந்த புதிய சீருடையை ராணுவ வீரர்கள் முதல்முறையாக அணிந்து பங்கேற்றனர். பல்வேறு நாடுகளின் ராணுவ சீருடைகளை ஆய்வு செய்து, விரிவான ஆலோசனைக்கு பிறகு இந்த சீருடை இறுதி செய்யப்பட்டுள்ளது. இது, மிகவும் நீடித்து உழைக்கக்கூடியது. கோடை காலத்திலும், குளிர் காலத்திலும் அணிந்து கொள்ள சவுகரியமானது.
ராணுவ வீரர்கள் பணியாற்றும் இடம், அங்குள்ள வானிலை ஆகியவற்றை கருத்திற்கொண்டு, சீருடை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதுபோல், நவீன வசதிகள் கொண்ட புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, கிழக்குக் கட்டளைப் பகுதிக்கு அண்மையில் பயணம் செய்த போது, புதிய ராணுவ சீருடையை அணிந்து சென்றார். அவருடன் அதிகாரிகளுடன் அந்த புதிய சீருடையை அணிந்து சென்றனர்.
Related Tags :
Next Story