5ஜி தொழில்நுட்ப அச்சம்: மீண்டும் அமெரிக்க விமான போக்குவரத்தை தொடங்கிய ஏர் இந்தியா...!

5ஜி தொழில்நுட்ப அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்ட அமெரிக்க விமான போக்குவரத்தை மீண்டும் ஏர் இந்தியா தொடங்கியது
வாஷிங்டன்:
உலகம் முழுவதும் பல நாடுகளில் 5ஜி செல்போன் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கெல்லாம் 5ஜி சேவையால் கொரோனா பரவுகிறது என்றும், பறவைகளுக்கு ஆபத்து என்றும் செய்தி பரப்பப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் அதிவேக திறன் கொண்ட 5ஜி செல்போன் தொழில்நுட்பத்தை தொலை தொடர்பு நிறுவனங்கள் நேற்று அறிமுகப்படுத்தின.
இதையடுத்து அதிவேக 5ஜி தொழில்நுட்பத்துக்காக நிறுவப்பட்ட செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சால், விமான போக்குவரத்து பாதிக்கப்படும் என்று விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்தன.
விமானம் பறக்கும் உயரத்தை அறிய முடியாமல் விமானிகள் திணறுவார்கள் என்றும், ஓடுபாதைக்கு அருகே செல்போன் கதிர்வீச்சு இருக்கும்போது, விமானம் புறப்படுவதிலும், தரை இறங்குவதிலும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டன. மேலும் 5ஜி தொழில்நுட்பத்தால் முக்கிய கருவிகள் செயலிழந்து விடும் என்றும் கூறப்பட்டது.
இந்த காரணங்களால், இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான விமான போக்குவரத்தை நேற்று முதல் ரத்து செய்துள்ளன. ஏர் இந்தியா அமெரிக்க செல்ல இருந்த 5விமானங்களை ரத்து செய்தது.
விமான நிறுவனங்கள் முன்கூட்டியே அறிவிக்காமல், திடீரென விமானங்களை ரத்து செய்ததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசு விமான நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.’
இந்த நிலையில் 5ஜி அலைக்கற்றை அச்சம் தொடர்பாக அதிகாரிகள் விளக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் அமெரிக்காவுக்கு விமான போக்குவரத்தை ஏர் இந்தியா இன்று தொடங்கியது .
போயிங் பி777 இல் அமெரிக்க செல்ல ஏர் இந்தியா அனுமதித்துள்ளது. அதன்படி, இன்று காலை முதல் விமானம் புறப்படும் செல்ல அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிகாரசபையின் ஒப்புதலுக்குப் பிறகு, ஏர் இந்தியா இன்று அமெரிக்காவிற்கு பி777 செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியது.
After approval from the US authority, Air India has resumed B777 operations to the US today… Due to 5G rollout, Air India had so far canceled more than 8 flights to the USA: Airline officials
— ANI (@ANI) January 20, 2022
Related Tags :
Next Story