கேரளாவில் முதல் டோஸ் தடுப்பூசி 100% செலுத்தப்பட்டது - மாநில அரசு தகவல்


கேரளாவில் முதல் டோஸ் தடுப்பூசி 100% செலுத்தப்பட்டது - மாநில அரசு தகவல்
x
தினத்தந்தி 21 Jan 2022 12:35 PM GMT (Updated: 21 Jan 2022 12:35 PM GMT)

கேரளாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100% செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

அந்த வகையில் கேரள மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100%  செலுத்தப்பட்டு விட்டதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 100% பேருக்கு (2,67,09,000 பேர்) முதல் தவணை தடுப்பூசியும், 83% பேருக்கு (2,21,77,950 பேர்) இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு 33% பேருக்கு (2,91,271 பேர்) முன்னெச்சரிக்கை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 15 முதல் 17 வயதுக்கு உட்பட்டோரில் 61 சதவீதம், அதாவது 9,25,722 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை கேரளாவில் 5 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story