டெல்லியில் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி


டெல்லியில் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி
x
தினத்தந்தி 21 Jan 2022 10:30 PM GMT (Updated: 21 Jan 2022 10:30 PM GMT)

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபோது, தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன.

புதுடெல்லி, 

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபோது, தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

 சந்தைகளில் கடைகள் சுழற்சி முறையில் இயங்கும் முறை அமலுக்கு வந்தது.இந்தநிலையில், டெல்லியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த டெல்லி அரசு முடிவு செய்தது. இம்முடிவு, கவர்னர் அனில் பைஜாலின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

ஆனால், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிப்பது என்ற யோசனைக்கு மட்டும் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். சனி, ஞாயிறு முழு ஊரடங்கு அமல், சுழற்சி முறையில் கடைகள் திறப்பு ஆகிய கட்டுப்பாடுகளை நீக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை. தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Next Story