கேரளாவில் புதிதாக 26,514 பேருக்கு கொரோனா பாதிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Jan 2022 2:48 PM GMT (Updated: 24 Jan 2022 2:48 PM GMT)

கேரளாவில் தற்போது 2,60,271 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,69,611 ஆக உயர்ந்துள்ளது. இதில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு பதிவாகி உள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் ஏற்பட்ட 13 உயிரிழப்புகள் இன்றைய கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா இறப்பு கணக்கில் சேர்க்கப்படாத 158 உயிரிழப்புகள் தற்போது மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்படி இன்றைய உயிரிழப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 51,987 ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயம் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 30,710 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 53,56,642 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் தற்போது 2,60,271 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story