73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்!


73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்!
x
தினத்தந்தி 26 Jan 2022 7:19 AM GMT (Updated: 2022-01-26T12:49:07+05:30)

நாட்டின் 73-வது குடியரசு தின விழாவினை பிரதிபலிக்கும் வகையில் கூகுளின் டூடுல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் 73-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் சுதந்திர போராட்டத்தில் தன் இன்னுயிரை நீத்து நாட்டின் சுதந்திர போராட்டத்திற்காக போராடிய லட்சக்கணக்கான தேச பக்தர்களின் தியாகத்தை போற்றி புகழும் நாளாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான கூகுள் நிறுவனம்,

 தனது   டூடுல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகின்றது. அந்த வகையில் வீரமிக்க  சுதந்திர வரலாற்று கொண்ட உலகின் மிக பெரிய ஜனநாயக  நாடான இந்தியாவின் குடியரசு தினவிழாவினை பிரதிபலிக்கும் வைகயில் கூகுள் நிறுவனம் தனது டூடுல் அமைப்பை மாற்றி உள்ளது.

அதில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் மற்றும் அணிவகுப்பு  மரியாதையின் போது இடம்  பெற்றிருக்கும் குதிரைகள், ஒட்டகங்கள் கொண்ட வகையில் கூகுள் டூல் காணப்படுகின்றது. இந்த டூடுல்  அமைப்பு இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story