9-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியில் வன்கொடுமை: மாணவர் கைது


9-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியில் வன்கொடுமை: மாணவர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2022 4:50 AM GMT (Updated: 27 Jan 2022 4:50 AM GMT)

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியில் வன்கொடுமை செய்த வழக்கில் 12-ம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்தனர்.

ஜெய்பூர், 

ராஜஸ்தானில் பள்ளி சென்ற 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 12-ம் வகுப்பு மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் துங்கர்பூர் மாவட்டம் பிச்சிவாரா கிராமத்தில் கடந்த 24-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியை அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன், உணவு இடைவெளையின் போது  பைக்கில்  கடத்தி சென்று அருகே உள்ள வனப்பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு வீட்டின் அருகே வீசி சென்ற வழக்கில் மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக பிச்சிவாரா காவல் நிலைய ஆய்வாளர் கூறுகையில், 

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீட்டுக்கு அருகே வீசி சென்ற வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில் அதே பள்ளியில்  12-ம் வகுப்பு படிக்கும் அம்ஜாரா பகுதியை சேர்ந்த மாணவின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

Next Story