மேற்கு வங்காளத்தில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி


மேற்கு வங்காளத்தில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விபத்து:  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
x
தினத்தந்தி 27 Jan 2022 7:31 AM GMT (Updated: 2022-01-27T13:01:30+05:30)

மேற்கு வங்காளத்தில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் அருகே திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கத்தின் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக  உயிரிழந்தனர்.

இதில் ஷியாமல் பவுரி, பிங்கி பௌரி, அன்னா பௌரி மற்றும் நடபர் பவுரி ஆகியோர் உயிரிழந்தனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது மேலும் கிராமவாசி ஒருவர் காயமடைந்தார்.

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் அபிஷேக் குப்தா கூறுகையில்,

 “திறந்த காஸ்ட் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. பின்னர் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய நான்கு உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்” என்றார்.

மேற்கு வங்காள பாஜக தலைவர் ஜிதேந்திர திவாரி சுரங்க உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

Next Story