எடியூரப்பா பேத்தி தூக்கிட்டு தற்கொலை...! காரணம் என்ன புதிய தகவல்கள்..!

எடியூரப்பா பேத்தி அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு
கர்நாடக மாநிலம் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ் .எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதி இவரது மகள் சவுந்தர்யா ( வயது 30) இவர் ஒரு பயிற்சி டாக்டர் ஆவார். இவரின் கணவர் மீரஜும் டாக்டராவார்.
இவர்கள் பெங்களூருவில் உள்ள வசந்த்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சவுந்தர்யாவின் வீட்டுக்கு வேலை செய்யும் பணி பெண் சென்றுள்ளார்.
கதவை திறக்க கூறி வெகுநேரம் தட்டி உள்ளார். ஆனால், கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பணி பெண் சவுந்தர்யாவின் கணவர் மீரஜிக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்த வந்த மீரஜ் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சவுந்தர்யா மின் விசிறியில் தூக்கு போட்டுக்கொண்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
போலீசார் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக பவுரிங் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா தியானேந்திரா கூறியதாவது:-
"எந்த சந்தேகமும் இல்லை. கர்ப்பத்திற்குப் பிறகு சவுந்தர்யா மன அழுத்தத்துடன் போராடிக்கொண்டிருந்தார் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். அவர் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்வதற்காக எடியூரப்பா அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்து வருவார். தனது பேத்தி மரணத்தால் எடியூரப்பா மிகவும் வருத்தமடைந்துள்ளார் என்று கூறினார்.
Related Tags :
Next Story