ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் வைத்த 2 வெடிகுண்டுகள் அகற்றம்


ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் வைத்த 2 வெடிகுண்டுகள் அகற்றம்
x
தினத்தந்தி 30 Jan 2022 9:48 PM GMT (Updated: 2022-01-31T03:18:59+05:30)

பாதுகாப்பு படையினர் செல்லும் வழியில் அவர்களை குறிவைத்து மாவோயிஸ்டுகள் அந்த வெடிகுண்டுகளை வைத்திருந்ததாக கருதப்படுகிறது.

ராஞ்சி, 

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் கார்கி கிராமத்தில் 2 வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த இடத்தில் மாவட்ட போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் குவிக்கப்பட்டனர்.

அவர்கள் தீவிர சோதனை நடத்தியதில், ஒரு கால்வாய் பாலம் அருகே 15 கிலோ எடையுள்ள 2 வெடிகுண்டுகள் சிக்கின. அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் வனப்பகுதிக்கு கொண்டு சென்று செயலிழக்க வைத்தனர்.

பாதுகாப்பு படையினர் செல்லும் வழியில் அவர்களை குறிவைத்து மாவோயிஸ்டுகள் அந்த வெடிகுண்டுகளை வைத்திருந்ததாக கருதப்படுகிறது. உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Next Story