பட்ஜெட் கூட்டத்தொடர்: மக்களவையை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்போம் என அனைத்து கட்சிகளும் உறுதி - ஓம் பிர்லா
பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மேற்கொண்டு வருகிறார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரை சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் மக்களவையின் அனைத்து கட்சி தலைவர்கள் இடம் பெற்றுள்ள அலுவல் ஆய்வு கமிட்டியை அவர் கூட்டினார். அப்போது பட்ஜெட் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவையை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்போம் என அனைத்து கட்சிகளும் உறுதியளித்ததாக தெரிவித்தார். அத்துடன், இந்த தொடருக்கான மக்களவை நிகழ்ச்சி நிரலை இறுதி செய்ததாகவும் அவர் கூறினார்.
மக்களவையில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் மற்றும் குடிமக்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் ஆக்கபூர்வமான வகையில் இருக்கும் என அவர் நம்பிக்கையும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story