’மோடி அரசின் பூஜ்ஜிய பட்ஜெட்’ - ராகுல் காந்தி தாக்கு


’மோடி அரசின் பூஜ்ஜிய பட்ஜெட்’ - ராகுல் காந்தி தாக்கு
x
தினத்தந்தி 1 Feb 2022 8:27 AM GMT (Updated: 1 Feb 2022 8:27 AM GMT)

மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை பூஜ்ஜிய பட்ஜெட் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. எனினும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.  

இந்த நிலையில், மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை  பூஜ்ஜிய பட்ஜெட் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:  மோடி அரசின் பூஜ்ஜிய பட்ஜெட். சம்பளம் பெறும் பிரிவினர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் , இளைஞர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில் முனைவோர்கள்  உள்ளிட்ட பிரிவினருக்கு  பட்ஜெட்டில் எந்த சலுகையும் இல்லை” என சாடியுள்ளார். 

Next Story