ஆந்திர பிரதேசத்தில் வரும் 14ந்தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு


ஆந்திர பிரதேசத்தில் வரும் 14ந்தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2022 11:37 PM IST (Updated: 1 Feb 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர பிரதேசத்தில் வரும் 14ந்தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.


விசாகப்பட்டினம்,



நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதும், குறைந்தும் காணப்படுகின்றன.  சமீப நாட்களில் இந்த எண்ணிக்கை சரிவை சந்தித்து வருகிறது.  எனினும், ஒரு சில மாநிலங்களில் சீரான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆந்திர பிரதேசத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு, வரும் 14ந்தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இதன்படி, இரவு 11 மணி முதல் அடுத்த நாள் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Next Story