ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து; 4 பெண்கள் உள்பட 5 பேர் பலி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 2 Feb 2022 1:16 AM IST (Updated: 2 Feb 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 4 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.


ராஞ்சி,



ஜார்க்கண்டின் தன்பாத் நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  ஈஸ்டர்ன் நிலக்கரி சுரங்கம் லிமிடெட் என்ற பெயரிலான அந்த நிறுவனத்தில் தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில், திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.  இதில் பலர் சிக்கி கொண்டனர்.  இதுபற்றி அறிந்ததும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்த விபத்தில் சிக்கி 4 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.  இதுபற்றி சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.


Next Story