சுங்கச்சாவடிகள் மூலம் 3 ஆண்டுகளில் ரூ.81 ஆயிரம் கோடி வருவாய் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி


சுங்கச்சாவடிகள் மூலம் 3 ஆண்டுகளில் ரூ.81 ஆயிரம் கோடி வருவாய் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
x
தினத்தந்தி 4 Feb 2022 11:08 AM IST (Updated: 4 Feb 2022 11:08 AM IST)
t-max-icont-min-icon

சுங்கச்சாவடிகள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.81 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பயனீட்டாளர் கட்டணத்தை குறைக்கவோ அல்லது மறு ஆய்வு செய்யவோ மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை குறைப்பதற்கு மத்திய அரசு எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். மேலும் கடந்த 3 ஆண்டுகளில் சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.81 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Next Story