போலி ரேசன் கார்டுகளில் உத்தர பிரதேசம் முதலிடம்- மத்திய அரசு தகவல்


போலி ரேசன் கார்டுகளில் உத்தர பிரதேசம் முதலிடம்- மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 4 Feb 2022 8:13 PM IST (Updated: 4 Feb 2022 8:18 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் அதிக அளவு போலியான ரேசன் அட்டைகள் வைத்திருக்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஒருவர் வெவ்வேறு இடங்களில் ரேசன் அட்டைகள் வைத்திருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நுகர்வோர் துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் போலியான மற்றும் தகுதியற்ற ரேசன் அட்டைதாரர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

2014ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை நாடு முழுவதும் தகுதியற்ற 4 கோடியே 28 லட்சத்து 1585 ரேசன் அட்டை கணக்குகள் நீக்கப்பட்டதாகவும்,  அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 1 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரத்து 301 ரேசன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தைப் பொருத்தவரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 140 தகுதியற்ற ரேசன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார்.

Next Story