“கொள்கை விவகாரங்களில் தலையிட முடியாது” - பூஸ்டர் தடுப்பூசி தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட் கருத்து
பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லி ஐகோர்டில் ஆதித்யா லரோயா என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி படேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்தியாவில் முன்கள பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு 9 மாத கால இடைவெளியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும், ஆனால் சில நாடுகளில் 2-வது தடுப்பூசிக்கு பிறகு 39 நாட்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றும், இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை குறைக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதனை பரிசீலித்த நீதிபதிகள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் கால இடைவெளியை மருத்துவ நிபுணர்கள் நிர்ணயித்துள்ளனர் என்றும், இது போன்ற கொள்கை விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story