அனில் தேஷ்முக்கின் உதவியாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி; சி.பி.ஐ.க்கு சிறப்பு கோர்ட்டு அனுமதி


அனில் தேஷ்முக்கின் உதவியாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி; சி.பி.ஐ.க்கு சிறப்பு கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 6 Feb 2022 2:21 AM IST (Updated: 6 Feb 2022 2:21 AM IST)
t-max-icont-min-icon

அனில் தேஷ்முக்கின் உதவியாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கேட்டு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.

முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மீது மும்பை கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் கூறிய குற்றச்சாட்டை அடுத்து அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அனில்தேஷ்முக்கின் தனி செயலாளர் சஞ்சீவ் பாலண்டே மற்றும் தனி உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து அனில் தேஷ்முக்கும் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் அனில் தேஷ்முக்கின் செயலாளர் மற்றும் உதவியாளரிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய அனுமதி கேட்டு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து சி.பி.ஐ.யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு அவர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய அனுமதி அளித்துள்ளது.

மேலும், சி.பி.ஐ. அதிகாரிகள் தேவையான எழுதுபொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் அறிக்கைகளை பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.


Next Story