“3% விவாகரத்துக்கு போக்குவரத்து நெரிசல் தான் காரணம்” - தேவேந்திர பட்னாவிஸ் மனைவி கருத்து
மும்பையில் 3 சதவீத விவாகரத்து போக்குவரத்து நெரிசலால் ஏற்படுவதாக அம்ருதா பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை,
பாஜகவின் மூத்த தலைவரும், மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ் மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், மும்பையில் பல இடங்களில் சாலைகளில் காணப்படும் பள்ளங்களால் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றம் சாட்டினார்.
இதன் காரணமாக பணிக்கு செல்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட முடியாமல் போவதாக தெரிவித்த அவர், இதன் விளைவாக வரும் பிரச்சினைகளால் விவாகரத்து வரை செல்வதாக அவர் கூறினார். மேலும் மும்பையில் 3 சதவீத விவாகரத்து போக்குவரத்து நெரிசலால் ஏற்படுவதாக குறிப்பிட்ட அவர், போக்குவரத்து நெரிசலை குறைக்க மும்பை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதலளித்த மும்பை மாநகராட்சி மேயர் கிஷோரி பெட்னேகர், ‘அம்ருதா பட்னாவிஸ்-ன் பேச்சு வியக்க வைக்கிறது’ என தெரிவித்தார். விவாகரத்து ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் ஆனால் போக்குவரத்து நெரிசலை காரணமாக கூறுவதை முதல் முறையாக தற்போது தான் கேள்விப்படுகிறேன் என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story