லதா மங்கேஷ்கர் மறைவு: ராகுல் காந்தி இரங்கல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Feb 2022 11:12 AM IST (Updated: 6 Feb 2022 11:12 AM IST)
t-max-icont-min-icon

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.  ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் சிகிச்சை பலனின்றி இன்று காலை தனது 92-ஆவது வயதில் காலமானார்.  

இதையடுத்து அவருக்கு பல்வேறு பிரபலங்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறும்போது, 

"லதா மங்கேஷ்கரின் மறைவு என்ற சோகமான செய்தி கிடைத்தது. பல தசாப்தங்களாக இந்தியாவின் மிகவும் பிரியமான குரலாக இருந்தார். அவரது தங்கக் குரல் அழியாதது. அவரது ரசிகர்களின் இதயங்களில் தொடர்ந்து எதிரொலிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது அனுதாபங்கள்". இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Next Story