கேரளாவில் நேற்றை விட இன்றைய கொரோனா பாதிப்பு 4 ஆயிரம் குறைவு; புதிதாக 22,524 பேருக்கு தொற்று..!


கேரளாவில் நேற்றை விட இன்றைய கொரோனா பாதிப்பு 4 ஆயிரம் குறைவு; புதிதாக 22,524 பேருக்கு தொற்று..!
x
தினத்தந்தி 7 Feb 2022 7:04 PM IST (Updated: 7 Feb 2022 7:04 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஒரே நாளில்  22,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 4,205 குறைவு. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 3,493 பேரும் எர்ணாகுளம் மாவட்டத்தில் 3,490 பேரும் புதிதாக  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 78,682 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 22 பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 59,115 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 49,586 குணமடைந்தனர். இதன்மூலம், இதுவரை கொரோனாவில் இருந்து 59,32,609 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 28.62 சதவிகிதமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9,384 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story