32 ஆயிரம் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட ராஜஸ்தான் ஆசிரியர் தகுதித்தேர்வு ரத்து..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Feb 2022 11:02 PM GMT (Updated: 7 Feb 2022 11:02 PM GMT)

32 ஆயிரம் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட ராஜஸ்தான் ஆசிரியர் தகுதித்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தானில் 32 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்காக தகுதித்தேர்வு (ரீட்) நடத்தப்பட்டது. இந்த 2-வது நிலை ரீட் தகுதித்தேர்வை மாநில அரசு ரத்து செய்துள்ளது.

இதற்கு பதிலாக புதிதாக தேர்வு நடத்தப்படும் என முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே 32 ஆயிரம் இடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் 30 ஆயிரம் பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 62 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் எனவும் அசோக் கெலாட் கூறியுள்ளார்.


Next Story