நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு எதிராக என்.ஐ.ஏ. வழக்கு
நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதில், தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் பாகிஸ்தானுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு கடத்தும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது. தேடப்படும் பட்டியலிலும் அவர் வைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் பிறருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இதனை அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சன்யுக்தா பராஷர் உறுதிப்படுத்தி உள்ளார்.
சமீபத்தில், மத்திய உள் விவகார அமைச்சகத்தின் உத்தரவின்படி, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று இப்ராகிமுக்கு எதிராகவும், மற்றவர்களுக்கு எதிராகவும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story