‘அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்’ - பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீடு!


‘அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்’ - பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீடு!
x
தினத்தந்தி 8 Feb 2022 2:03 PM IST (Updated: 8 Feb 2022 2:03 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆளும் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது.

லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எ ஐ எம் ஐ எம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கி உள்ளன.

பா.ஜ.க இன்று தனது தேர்தல் அறிக்கை ‘லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா’வை வரவிருக்கும் உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில பிரிவு தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் ஆகியோர் சேர்ந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். 

முன்னதாக பிப்ரவரி 6 அன்று தேர்தல் அறிக்கை வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் அன்றைய தினம் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவினால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள சில முக்கிய அறிவிப்புகள்:

   -அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.

   -மாநிலத்தில் 6 மெகா உணவுப் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

   -ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு ₹1 லட்சம் வரை நிதியுதவி.

   -மாநிலத்தில் 30,000 மேல்நிலைப் பள்ளிகள் நவீனமயமாக்கபடும்.

   -பொது போக்குவரத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு இலவச பயணம்.

மேலும் இது போன்ற இன்னும் பல அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Next Story