எனது கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை: ராகுல் காந்தி


எனது கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 8 Feb 2022 7:13 PM IST (Updated: 8 Feb 2022 7:13 PM IST)
t-max-icont-min-icon

நங்கள் உண்மையை கூறுவதால் காங்கிரஸ் கட்சியை கண்டால் பாஜக அஞ்சுகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,
 
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதிலளித்துப் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக பிரதமர் மோடி சாடினார்.  இந்த நிலையில், இன்று  செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பிரதமர் மோடி எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது;- 

பிரதமர் மோடி எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. சீனா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நேரு நாட்டிற்கு சேவையாற்றினார். யாருடைய சான்றிதழும் எனக்கு தேவையில்லை. நங்கள் உண்மையை கூறுவதால் காங்கிரஸ் கட்சியை கண்டால் பாஜக அஞ்சுகிறது” என்றார். 

Next Story