உயிரை பணயம் வைத்து மீட்ட ராணுவ வீரர்கள்... முத்தமிட்டு நன்றி தெரிவித்தார் இளைஞர்!
இந்திய ராணுவத்தின் தீவிர முயற்சியின் பலனால் இளைஞர் பாபு பத்திரமாக மீட்கப்பட்டார்.
பாலக்காடு,
கேரளாவில் உள்ள மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்ற இளைஞர் பாபு அங்குள்ள மலை இடுக்கில் சிக்கி தவித்தார். அவரை மீட்க பெரும் முயற்சிகள் நடந்தன. இறுதியில் இந்திய ராணுவத்தின் தீவிர முயற்சியின் பலனால் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது நலமாக உள்ள இளைஞர் பாபு, தன்னை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு முத்தம் கொடுத்து நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மலை இடுக்கில் சிக்கி தவித்த இளைஞரை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story