உ.பி. முதல்கட்ட தேர்தல் : 60.17 % வாக்குகள் பதிவு..!


உ.பி. முதல்கட்ட தேர்தல் : 60.17 % வாக்குகள் பதிவு..!
x
தினத்தந்தி 10 Feb 2022 10:00 PM IST (Updated: 10 Feb 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

இன்று காலை 7 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடந்தது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.  இதன் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று நடைபெற்றது  11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர்.

தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பதற்றமான பகுதிகளில் மத்திய படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கியது.  மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடந்தது.

இன்று நடந்த  உத்தர பிரதேச  சட்டசபை  தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில்  60.17  சதவீதம் வாக்குகள்  பதிவாகி உள்ளன.. 

Next Story