திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வினியோகம்..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Feb 2022 3:14 AM IST (Updated: 11 Feb 2022 3:14 AM IST)
t-max-icont-min-icon

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.

திருமலை, 

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரணப் பக்தர்களுக்கு அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதி, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசாமி 2-வது சத்திரம் ஆகிய 3 இடங்களில் வருகிற 16-ந்தேதி(புதன்கிழமை) முதல் தினமும் 10 ஆயிரம் வீதம் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரில் வழங்கப்படுகிறது. பக்தர்கள் பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Next Story