கிரிப்டோ கரன்சி : "வரி விதிப்பது அரசின் உரிமை" - நிர்மலா சீதாராமன்


கிரிப்டோ கரன்சி : வரி விதிப்பது அரசின் உரிமை -  நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 11 Feb 2022 1:54 PM IST (Updated: 11 Feb 2022 1:54 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா சூழலிலும் நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. மத்திய பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலுரை அளித்தார் .

பதிலுரையின் போது, எதிர்க்கட்சி  எம்.பி.க்கள் .தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் தெரிவித்தனர். தனியார் மயத்திற்கு எதிர்ப்பு என்றால் காங். ஆட்சியில் ஏன் பல பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டன?  என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார் . 

கிரிப்டோ கரன்சி தொடர்பாக உரிய ஆலோசனைக்கு பிறகே முடிவெடுக்கப்படும் என்றும் , கிரிப்டோ கரன்சி பரிமாற்றத்திற்கு வரி விதிப்பது என்பது அதனை அங்கீகரிப்பது என்று அர்த்தமாகாது" என்றும் , வரி விதிப்பது அரசின் உரிமை என்றும்  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய நிதியமைச்சர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பணவீக்கம் 9.1%ஆக இருந்தது. அதாவது ரூ.2.12 லட்சம் கோடி மட்டுமே. இதனால் பாஜக ஆட்சியின்போது உலகளாவிய நிதி நெருக்கடி எங்களைத் தாக்கியது.

மேலும், கொரோனா பரவளின்போது ​​மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இழப்பு 9.57 சதவீதமாக இருந்தது. 7 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு ரூ.1.1 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது ரூ.2.32 லட்சம் கோடியாக உள்ளது. நாங்கள் திட்டத்தை வெளிப்படையாகவும் சரியாகவும் பயன்படுத்துகிறோம். நாடு எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இடையிலும் பணவீக்கம் 6.2% ஆக உள்ளது.

கொரோனா சூழலிலும் நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. மத்திய பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் 25 ஆண்டுகளில் கட்டமைக்கப்படும் உள்கட்டமைப்பின் ஒருங்கிணைந்த விளைவை அதிகரிக்க நாங்கள் நினைத்தோம் என்றும் வரும் 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு முக்கியமானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

Next Story